அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி என இரண்டாகப் பிரிந்தது.
பின்னர், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதுதொடர்பாக இரு அணியினரும் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர்.
பின்னர், பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
தற்போது எஸ்.பி. வேலுமணியில் 16 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணையவுள்ளதாகத் தெரிகிறது.
இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளும் தனித்தனியே இன்று காலை ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தற்போது சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
எஸ்.பி. வேலுமணியுடன் இருந்த சி.வி. சண்முகம் மட்டும் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை சி.வி. சண்முகம் அலுவலகத்தில் வைத்துதான் எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி கூறி வந்த நிலையில் இபிஎஸ்ஸுடன் இந்த சந்திப்பானது நடைபெறுகிறது. இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் இபிஎஸ் அணியுடன் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல சட்டப்பேரவைத் தலைவரிடம் இரு அணிகளும் அளித்த மனுக்கள் வாபஸ் பெறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
'இனி நமக்குள் பிரிவில்லை' என அதிமுக ஐடி பிரிவும் இன்று காலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
S.P. Velumani Meets EPS at chennai; C.V. Shanmugam Alone Absent
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

'இனி நமக்குள் பிரிவில்லை' - அதிமுக ஐடி விங்! இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைகிறது?
'நான்தான் எல்லாம்' என்பது கூடாது! இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணி
எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்







