விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தப் புதிய தொடரையும் தயாரித்து வருகிறது.
கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.
கனா கண்டேனடி தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கனா கண்டேனடி தொடர் இன்று(ஜூன் 15) முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்தத் தகவலை கனா கண்டேனடி தொடரின் நாயகன் ஜாய்சன் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், கனா கண்டேனடி தொடர் நிறைவடைய உள்ளது, இந்தத் தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டும் அல்லாமல், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
The broadcast time of the serial Kana Kandenadi, currently airing on Vijay TV, has been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











