நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

காதல் காதல் காதல் தொடர் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:43 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே தொடரில் 3 காதல் கதைகளை மையப்படுத்தி, வித்தியாசமான பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்று மகன்களின் காதலை எதிர்க்கும் தந்தையை பிரதானப்படுத்தியும், மாறுபட்ட மூன்று ஜோடிகளின் காதல் கதையை விவரிக்கும் கதையாகவும் இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமான அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மலையாள சின்ன திரை நடிகர் நலீஃப் கியா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.

முத்தழகு தொடர் நாயகி ஷோபனா, அண்ணா தொடரில் நடித்து பிரபலமான சுசித்ரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கமகள் தொடரில் நடித்த மனுஸ்ரீ கார்த்திகேயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும், 3 மகன்களுக்கு தாயாக, பாக்கியலட்சுமி தொடர் சுசித்ராவும், தந்தையாக, ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் சந்திரசேகரும் நடிக்கிறார்கள்.

காதல் காதல் காதல் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், வரும் ஆக. 17 ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் - காமன் மேன் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுவதால், இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Summary

The broadcast time of the serial Kadhal Kadhal Kadhal, currently airing on Vijay TV, has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.