அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

காதலனுடன் விடியோ வெளியிட்ட நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்!

காதலனுடன் பயணம் மேற்கொண்ட விடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்...

Actress Archana ravichandran  with lover Arun prasath

காதலன் அருண் பிரசாத் உடன் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் - இன்ஸ்டாகிராம்

Published On :2 ஜூலை 2026, 5:30 pm IST

நடிகர் அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது காதலன் அருண் உடன் பயணம் மேற்கொண்ட விடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவ்வபோது காதலனுடன் வெளியே பயணங்கள் செல்லும் விடியோவை வெளியிடும் அர்ச்சனா, இம்முறை காரில் இருந்தவாறு தனது காதலன் கொடுத்த இன்ப அதிர்ச்சியை விடியோவாக பதிவிட்டுள்ளார்.

பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். இத்தொடரில் வில்லியாக இவரின் நடிப்பு பலரைக் கவர்ந்தது.

இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வைல்டு கார்டு போட்டியாளராகச் சென்றாலும் பட்டத்தை வென்று ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர், சின்ன திரை நடிகர் அருண் பிரசாத்தை காதலித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து புகழ் பெற்ற அருண், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது காதலி அர்ச்சனாவுக்கு நேரலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது, இவர்களிடையேயான காதல் உறுதியானது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அருண் பிரசாத் உடன் அர்ச்சனா

அருண் பிரசாத் உடன் அர்ச்சனா - படம் - இன்ஸ்டாகிராம்

இதனிடையே இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துவரும் அர்ச்சனா, தற்போது காதலுடன் காரில் செல்லும் விடியோவை பகிர்ந்துள்ளார்.

அர்ச்சனா - அருண் பிரசாத்

அர்ச்சனா - அருண் பிரசாத் - இன்ஸ்டாகிராம்

அதில், பயணத்தின் நடுவே இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அர்ச்சனாவுக்கு முத்தம் கொடுக்கிறார் அருண். இந்த நிகழ்வும் விடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களில் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமிய ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Archana ravichandran releases a video filled with lover Arun prasath

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.