மகாபாரதம் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர், நடிகைகள் இணைந்து மீண்டும் மகாபாரதத்தை மேடை நாடகமாக பெங்களூருவில் அரங்கேற்றியுள்ளனர்.
இந்த அரங்கேற்றத்தைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். சினிமா தியேட்டருக்கு வருவதைப்போல, மகாபாரதம் நாடகத்தைக் காண அரங்கம் நிரம்பி வழிவது மகிழ்ச்சி அளிப்பதாக மேடையில் நடித்தவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்டார் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பாகி 13 ஆண்டுகள் ஆன பிறகும், ரசிகர்களிடம் இத்தொடருக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இக்கூட்டம் அமைந்துள்ளது.

மகாபாரத அரங்கேற்றம்
ஸ்டார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் 2013 ஆம் ஆண்டு மகாபாரத இதிகாசத் தொடர் எடுக்கப்பட்டது. இத்தொடரின் பிரமாண்ட உருவாக்கத்தால் மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் 267 நாள்கள் வரை ஒளிபரப்பானது. இத்தொடரில் நடித்த பாத்திரங்களும், காட்சிகளின் பிரமாண்டமும் நெடுந்தொடர் என்பதைத் தாண்டி, மக்கள் மனதில் பதிந்தது.

அரங்கம் நிறைந்த கூட்டம்
சித்தார்த் ஆனந்த் குமார், அமர்பிரீத், கமல் மோங்கா, லோக்நாத் பாண்டே, முகேஷ்குமார் சிங் என 5 இயக்குநர்கள் மகாபாரதம் தொடரை இயக்கினர்.
பூஜா ஷர்மா திரெளபதியாகவும், செளரப் ராஜ் ஜெயின் ஸ்ரீ கிருஷ்ணராகவும், ஷாஹிர் ஷேக் அர்ஜுனனாகவும் அஹம் ஷர்மா கர்ணனாகவும் நடித்திருந்தனர்.
இத்தொடரில் பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என அனைத்து பாத்திரங்களுக்கும் நடிகர்கள் கச்சிதமாகப் பொருந்தியிருந்ததால், மற்ற மகாபாரத தொடர்களைக் காட்டிலும் மிகுந்த வரவேற்பு இத்தொடருக்கு இருந்தது.
இந்த வரவேற்பின் எதிரொலியாக மகாபாரதத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இணைந்து மேடை நாடகமாக மகாபாரதத்தை அரங்கேற்றி வருகின்றனர். அந்தவகையில் மீண்டும் மேடை நாடகமாக மகாபாரதம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

மேடையில் மகாபாரத கதாபாத்திரங்கள் - இன்ஸ்டாகிராம்
சினிமா தியேட்டரின் முதல் காட்சி போல, அரங்கம் நிரம்ப மகாபாரதம் நாடகம் அரங்கேறியது. இதனை மகாபாரதத்தின் சதி என்ற பாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா ஸ்ரீங்கேரி பகிர்ந்துள்ளார்.
அதில் அரங்கம் நிரம்ப மக்கள் அமர்ந்து மகாபாரதம் மேடை நாடகத்தை கண்டு ரசிக்கின்றனர். ஓடிடி தளங்களில் மகாபாரதம் காணக்கிடைத்தாலும் மேடை நாடகமாக உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் கண்டு ரசிப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்துகொண்டேதான் இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
Summary
Stage play performance by the cast of the Vijay TVs Mahabharata Serial Actor Actress
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறகடிக்க ஆசை தொடரில் இணைந்த பிரபல திரைப்பட நடிகர்!

ஆடுகளம் தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

மீண்டும் மகாநதி தொடரில் கமருதீன்!

ரசிகர்களை சந்தித்த மகாபாரதம் நடிகர்கள்! 13 ஆண்டுகளுக்குப் பிறகும் மிகுந்த ஆதரவு!
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |




