FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

சந்தியா ராகம் தொடரில் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர்!

சந்தியா ராகம் தொடரில் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர் நடிக்கவுள்ளது குறித்து...

News image

சந்தியா ராகம் தொடர் - படம்: விடியோ கிளிப்

Updated On :15 ஜூலை 2026, 3:51 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமல் விலகிய நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடிகர் சத்யா சுதா நடிக்கிறார்.

கடந்த 2023 அக்டோபர் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு சந்தியா ராகம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் 950 நாள்களைக் கடந்துள்ளது.

இந்தத் தொடரில் சந்தியா ஜகர்லமுடி, அந்தாரா, விஜே தாரா, ராஜீர் பரமேஸ்வரன், சுர்ஜித் குமார் உள்ளிட்ட பலர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் ஜானகி, சந்தியா என்னும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளான தனலட்சுமி, மாயா என்னும் இரு சகோதரிகளின் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

சந்தியா ராகம் தொடரில் சிவராமன் என்ற முக்கிய வேடத்தில் நடித்து வந்த நடிகர் ராஜ்கமல், இந்தத் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சிவராமன் பாத்திரத்தில் நடிகர் சத்யா சுதா நடிக்கவுள்ளார். இவர் பல முன்னணி தொடர்களில் குணசித்திரம், வில்லன் என அனைத்து பாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்.

அண்மையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் தொடர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் நடித்து வருகிறார்.

Summary

Actor Sathya Sudha has stepped in to play the role in the Zee Tamil serial Sandhya Ragam following the departure of actor Rajkamal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.