அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சந்தியா ராகம் தொடரிலிருந்து விலகிய ராஜ்கமல்! காரணம் என்ன?

சந்தியா ராகம் தொடரிலிருந்து ராஜ்கமல் விலகியது குறித்து...

News image

சந்தியா ராகம் தொடர் - படம்: விடியோ கிளிப்

Updated On :7 ஜூலை 2026, 1:24 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமல் விலகியுள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு சந்தியா ராகம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் 950 நாள்களைக் கடந்துள்ளது.

இந்தத் தொடரில் சந்தியா ஜகர்லமுடி, அந்தாரா, விஜே தாரா, ராஜீர் பரமேஸ்வரன், சுர்ஜித் குமார் உள்ளிட்ட பலர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் ஜானகி, சந்தியா என்னும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளான தனலட்சுமி, மாயா என்னும் இரு சகோதரிகளின் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

சந்தியா ராகம் தொடரில் சிவராமன் என்ற முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் ராஜ்கமல், இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, நடிகர் ராஜ்கமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது:

“தனிப்பிட்ட சில காரணங்களுக்காக சந்தியா ராகம் தொடரில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த தொடர் குழு, ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பரிணாமத்தில் நான் உங்களை சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவராமன் பாத்திரத்தில் புதிதாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த விவரம், வரும் நாள்களில் தெரியவரும்.

Summary

Actor Rajkamal has quit the serial Sandhya Ragam, which is being aired on Zee Tamil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.