கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் பிக் பாஸ் சீசன் 9 நண்பர்கள் சாமி தரிசனம் செய்தனர். படிப்பதற்காக வெளிநாடு போகவுள்ளதாகக் கூறிய அரோரா சின்கிளேர், துஷார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
விஜய் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நடிகை திவ்யா கணேசன் பிக் பாஸ் சீசன் 9 பட்டத்தை வென்று, ரூ. 50 லட்சம் பரிசை தட்டிச்சென்றார்.
இப்போட்டியில் முதலில் ஆண்கள் 10 பேர், பெண்கள் 10 என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பின்னர் வைல்டு கார்டு மூலம் 4 போட்டியாளர்கள் நுழைந்தனர்.
வியானா, ரம்யா ஜோ, அப்சரா, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன்ராஜ் தேவசகாயம், நந்தினி, கலையரசன், ரம்யா ஜோ, வியானா, கானா வினோத், விஜே பார்வதி, கமருதீன், கனி, எப்ஃஜே, துஷார், அமித் பார்கவ், சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேசன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்
இதில் சிலர் நண்பர்களாக மாறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அவர்களின் நட்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கனி, எஃப்.ஜே., துஷார், அரோரா, அப்ரசா, சபரிநாதன், கெமி ஆகியோர் மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மருதமலை கோயிலில் பிக் பாஸ் நண்பர்கள்
அங்கு கோயிலில் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நண்பர்களாக பழகியதுடன் மட்டுமின்றி, வெளியே சென்ற பிறகும் இவர்களின் நட்பு தொடர்வது மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கெமி - இன்ஸ்டாகிராம்
சிலர், இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சென்றுள்ளதால், புதிய படத்தில் இவர்கள் ஒப்பந்தமாகியுள்ளனரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரோராவும் துஷாரும் நாயகன் நாயகியாக வைத்து படம் இயக்க வேண்டும் என இயக்குநர் பிரவீன் காந்தி கூறியிருந்த நிலையில், துணை பாத்திரங்களாக பிக் பாஸ் சக போட்டியாளர்களையே பயன்படுத்தியுள்ளரா? என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Bigg boss 8 team Actors Actress in Maruthamalai murugan temple
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

மெகா சைஸ் ஊதுவத்தி ஏற்றி சாமி தரிசனம் செய்த பக்தா்கள்

வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமானோா் தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து!
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |




