திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அம்த் ஷா சாமி தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை மாலை சென்னை வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள உண்ணாமலை அம்மன் நகரில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கினார்.
அங்கிருந்து திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்று, சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடா்ந்து, கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதையடுத்து, அவர் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறாா்.
அமித் ஷா வருகையையொட்டி, மத்திய ரிசா்வ் காவல் படையினா் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் தலைமையிலான போலீஸாா் அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ரமணாசிரமம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயில், ரமண மகரிஷி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிரோன்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டுள்ளாா்.
Summary
Union Home Minister Amit Shah offered prayers at the Annamalaiyar Temple in Thiruvannamalai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

திருவண்ணாமலைக்கு இன்று அமித் ஷா வருகை: 3 அடுக்கு பாதுகாப்புடன் 1500 போலீசார் குவிப்பு

அமித் ஷா நாளை தமிழகம் வருகை! திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!
போராட்டம் தீவிரம்: அமித் ஷாவுடன் சந்திப்பு! ராஜிநாமா செய்கிறாரா தர்மேந்திர பிரதான்?
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



