மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஆக. 8) தமிழ்நாட்டுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஆக. 8 மற்றும் ஆக. 9 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தில், தமிழ்நாட்டின் சில முக்கிய கோயில்களில் அவர் வழிபாடு செய்யவுள்ளார். இதன்படி, நாளை அமித் ஷா திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், வரும் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி செல்லும் அமைச்சர் அமித் ஷா அங்கு காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரியில் “ஹர் கர் திரங்கா” பேரணியையும் அவர் துவங்கிவைக்கவுள்ளார்.
Summary
Home Minister Amit Shah will visit Tamil Nadu tomorrow (August 8).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் வர தைரியமில்லாத உள்துறை அமைச்சர் ராகுல்காந்தி பேச்சு
பாஜக தொண்டருக்கு பதவியைவிட நாடும் இளைஞர்களும்தான் முக்கியம்: அமித் ஷா
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! மக்களவைத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு!
போராட்டம் தீவிரம்: அமித் ஷாவுடன் சந்திப்பு! ராஜிநாமா செய்கிறாரா தர்மேந்திர பிரதான்?
விடியோக்கள்

முதல்வர் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி | DMDK | TN Assembly




