FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

டாக்ஸிக் படத்திற்காக மொட்டை அடித்துக்கொண்டாரா நயன்தாரா? உண்மை என்ன?

டாக்ஸிக் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, நடிகை நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டதைப்போன்ற புகைப்படங்கள் உண்மையா? என்பது குறித்து...

News image

நயன்தாரா - எக்ஸ்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 8:35 pm IST

டாக்ஸிக் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, நடிகை நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டதைப்போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

எந்தவொரு திரைப்பட புரமோஷன்களுக்கும் செல்லாத நயன்தாரா டாக்ஸிக் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் சென்றிருந்த நிலையில், தற்போது படத்தின் வெற்றிக்காக மொட்டை அடித்துக்கொண்டதாகவும் பலர் கருத்துகளைக் குறிப்பிட்டு அப்படங்களை பகிர்ந்து வந்தனர்.

மேலும், டாக்ஸிக் படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸ் நயன்தாராவின் நெருங்கிய நண்பர் என்பதாலேயே இப்படத்தில் நடிகர் யஷ்ஷின் சகோதரியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டதால் இவை அனைத்தையும் இணைத்து, படத்தின் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டதாக புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால், உண்மையில் இப்படங்கள் செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதிக்கு நயன்தாரா சென்றிருந்தார்.

அப்போது அவர் வரிசையில் நின்றிருந்த புகைப்படத்தை ஏஐ உதவியுடன் மொட்டை அடித்ததைப்போன்று எடிட் செய்து பகிரப்பட்டுள்ளது.

நயன்தாரா தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படாத நிலையில், இப்படங்கள் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கிய டாக்ஸிக் படத்தில், ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

Did Nayanthara shave her head for Tirumala visit ahead of Toxic release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.