நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

ரூ.300 கோடி பட்ஜெட்டில் பாலிவுட்டில் அறிமுகமாகும் கல்யாணி பிரியதர்ஷன்!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பாலிவுட்டில் அறிமுகமாவது குறித்து...

News image

கல்யாணி பிரியதர்ஷன். - படம்: இன்ஸ்டா / கல்யாணி பிரியதர்ஷன்

Updated On :22 ஜூலை 2026, 5:53 pm IST

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லோகா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி ஹலோ எனும் தெலுங்கில் 2017ல் அறிமுகமானார். தமிழில் 2019ல் ஹீரோ எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர், மாநாடு மிகப்பெரிய ஹிட் அடித்தது.

டோமினிக் அருண் இயக்கிய ’லோகா: சேப்டர் 1’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அதன் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது.

இந்த நிலையில், பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் உடன் ப்ரளய் (Pralay) எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் ஜோம்பி த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது.

ஜெய் மேத்தா இயக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க பிரத்யேகமாக பயிற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. லோகா படத்திலும் யக்‌ஷி கதாபாத்திரத்தில் கல்யாணி ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் சுமார் ரூ.300 பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் அதிகமாக விஎஃப்எக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை ட்ரூ ஸ்டோரி ஃபிலிம்ஸ், மா கசம் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

Summary

Kalyani Priyadarshan is gearing up to take on her first Bollywood film alongside Ranveer Singh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.