இயக்குநர் பிரியதர்ஷன் பாலன் திரைப்படத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கிய “பாலன் தி பாய்” திரைப்படம் வருகிர ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னணி கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்ஹானா பளதிங்கள் நடிக்க இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
ஆவேஷன் திரைப்படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசஃபின் கதை என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இப்படம் குறித்து பேசிய விடியோ துணுக்கைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், “மலையாளத் திரையிலகில் எப்போதும் நினைவுகூறத்தக்க மிகச்சிறந்த திரைப்படமாக பாலன் இருக்கும். இது என்னுடைய உத்திரவாதம். இவ்வளவு பேரின் பங்களிப்பு மிகச்சிறப்பாக ஒன்றிணைந்துள்ளது. 2.40 மணி நேரம் கொண்ட படத்தில் எங்கும் சோர்வு இல்லை. திரையரங்கைவிட்டு வெளியேறும் போது மனதில் தங்குகிறது. நம்ப முடியாத மேஜிக்” என பிரியதர்ஷன் பாராட்டியுள்ளார்.
Director Priyadarshan has praised the film Balan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










