எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரன்வீர் சிங் பாலிவுட்டில் நடிக்கத் தடை?

நடிகர் ரன்வீர் சிங் திரைப்படங்களில் நடிக்க பாலிவுட் திரைப்பட அமைப்பு தடை விதித்துள்ளது.

News image

நடிகர் ரன்வீர் சிங்

Updated On :25 மே 2026, 9:27 pm IST

நடிகர் ரன்வீர் சிங் திரைப்படங்களில் நடிக்க பாலிவுட் திரைப்பட அமைப்பு தடை விதித்துள்ளது.

பாலிவுட் முன்னணி இயக்குநர் டின் முன்னணி இயக்குனர் ஃபர்ஹான் அக்தர் இயக்கவிருந்த டான் 3 திரைப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

பல கோடிகள் செலவில் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாள்களில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திடீரென நடிகர் ரன்வீர் சிங் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து, ரன்வீர் சிங்சின் சம்பளமும் உயர்ந்தது.

இந்த நிலையில், டான் 3 படத்தில் துரந்தர் படத்தைப் போலவே வன்முறைக் காட்சிகள் வைக்குமாறும் கதையில் சில மாற்றங்களைச் செய்யுமாறும் ரன்வீர் சிங் தரப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரன்வீர் சிங் முன்னர் பேசிய சம்பளத்தை விட அதிகமாகக் கேட்டதாகவும், லாபப் பகிர்வு, அதீத நிபந்தனைகள் மற்றும் பட்ஜெட் ரீதியாக தயாரிப்பு தரப்புடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டகாகவும் கூறப்படும் நிலையில் படத்திலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், படத்தின் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர், தயாரிப்பாளர் மற்றும் ரன்வீர் சிங் இடையே பிரச்னை வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, படக்குழுத் தரப்பில் கடந்த வாரம் அளித்த புகாரின் பேரில் பாலிவுட் திரைப்பட அமைப்பான 'ஃபெடரேஷன் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயீஸ்’ அமைப்பு ரன்வீர் சிங்கிற்கு தடை விதித்துள்ளது.

இதன்படி, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ரன்வீர் சிங்குடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Summary

Is Ranveer Singh Banned from Acting in Bollywood?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.