லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டதா? நீதிபதிகள் கேள்வி

துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு

Dhurandhar: The Revenge

துரந்தர் - துரந்தர் போஸ்டர்

Published On :21 மே 2026, 11:58 am IST

துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் துரந்தர் 1 மற்றும் துரந்தர் 2.

இரு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில், நாளை (மே 21) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் துரந்தர் 2 வெளியாகிறது.

இந்த நிலையில், துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை வெளியிட்டதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு உத்திகளும், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களும் துரந்தர் 2 படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, இது நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துரந்தர் 2 மீதான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், துரந்தர் 2 திரைப்படம் பொழுதுபோக்கு நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனால் ஏற்படுத்தும் தாக்கத்தை மறுக்க இயலாது. படத்தின் காட்சிகள் குறித்து மனுதாரர் எழுப்பிய கவலைகள் குறித்தும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர்.

Summary

Did Ranveer Singh's Dhurandhar Out Details Of Army Operation details?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.