இந்தியாவில் வசூல் சாதனை படைத்த துரந்தர் திரைப்படம் ஜப்பானில் அந்நாட்டு மொழியில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது.
தொடர்ந்து, கடந்த மார்ச் 19 ஆம் தேதி துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியான இப்படம், 6வது வாரத்தில் வெற்றிகரமாக வசூலித்து வருகிறது.
துரந்தர் திரைப்படத்தின் இரு பாகங்களின் மொத்த வசூல் ரூ. 3,000 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. இந்த சாதனையைப் படைக்கும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது.
இந்த நிலையில், வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி ஜப்பானில் ஜப்பான் மொழியில் துரந்தர் முதல் பாகம் வெளியிடவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிவிப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

துரந்தர் போஸ்டர் - X | Jio Studios
Summary
Dhurandhar to be Released in Japan! Official Announcement!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் - 2 : அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி!

துரந்தர் 2! திரிதேவ் படத்தின் பாடல் அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு!

7 நாள்களில் ரூ. 1,000 கோடி! வசூல் சாதனையில் துரந்தர் 2!

தமிழுக்கு வருவாரா சாரா அர்ஜுன்?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

