சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை படக்குழு அறிவித்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டுமல்லாது பல பகுதிகளிலும் கருப்பு திரைப்படத்துக்கு டிக்கெட் விற்பனைகள் சிறப்பாகவே நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதுவரை கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கருப்பு திரைப்படம் இன்று(ஜூன் 12) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary
The film crew has announced the official box office figures for Suriya's movie Karuppu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியான சூர்யாவின் கருப்பு!

ரூ. 300 கோடியைக் கடந்த சூர்யாவின் கருப்பு!
ஆச்சரியப்படுத்தும் கருப்பு வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
விடியோக்கள்

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani




