துரந்தர் - 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிநாடுகளில் வெளியான நிலையில், இந்தியாவில் எந்த ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ஆம் தேதி துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து வெளியான இதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், துரந்தர் - 2 திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்சார் செய்யப்பட்ட சில வசனங்கள், நீக்கப்பட்ட அதிரடிக் காட்சிகளுடன் 3 மணி நேரம் 52 நிமிடங்கள் கொண்ட அன்-கட் வெர்ஷனாக வெளியாக உள்ளது.
இதனிடையே, துரந்தர் - 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மே 14 ஆம் தேதி வெளிநாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Summary
While the film Durandhar 2 has been released internationally on the Netflix OTT platform, information has now emerged regarding which OTT platform it will be released on in India, and when.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் தனுஷின் கர எப்போது?

துரந்தர் - 2 : அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

