முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

அனைத்துமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்படும்..! காவல்துறையின் அராஜகத்துக்கு பாலிவுட் பாடகர் கண்டனம்!

பாலிவுட் பாடகர் அரிஜித் சிங் சிஜேபி போராட்டத்தில் காவல்துறையினரின் தடியடி குறித்து கூறியிருப்பதாவது...

News image

சிஜேபி போராட்டத்தில் வன்முறை, அரிஜித் சிங். - படங்கள்: பிடிஐ, அரிஜித் சிங் சமூக வலைதளம்.

Updated On :22 ஜூலை 2026, 3:45 pm IST

பிரபல பாலிவுட் பாடகர் அரிஜித் சிங் சிஜேபி போராட்டத்தில் காவல்துறையினரின் தடியடி நடத்தியது குறித்து, “அனைத்துமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் மாணவர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி “சாலோ சன்சத்” என்ற பேரணி நடத்தியபோது காவல்துறையினர் தடியடியும் கண்ணீர்ப்புகை குண்டுகளும் வீசப்பட்டதால் பலர் காயமடைந்தனர்.

இளைஞர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று தில்லியில் பிரதமர் மோடி வீட்டின் முன்பாக தர்னாவில் ஈடுபட்டதால் அவர்களும் காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இந்த நிகழ்வுக்கு பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற பாடகரான அரிஜித் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறியதாவது:

தற்போது நீங்கள் மாணவர்களை அடிக்கிறீர்கள். உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?

தலைவர்களே, அமைச்சர்களே... என்ன நடக்கிறது? உங்களை நீங்கள் கடவுள் அல்லது வேறு எதாவது என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?

எல்லாமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, பிரகாச்ஜ் ராஜ், ஷபானா ஆஸ்மி ஆகியோர் இதில் கலந்துகொண்டார்கள். அனுராக் காஷ்யப், ஆமிர்கான், ஹூமா குரேஷி உள்பட பாலிவுட் பல திரைப்பிரபலங்கள் இந்தச் சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள்.

Summary

Everything will be remembered: Arijit Singh supports students after police crackdown

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.