தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியி (சிஜேபி) இளைஞர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 20) தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். அப்போது காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் அவர்களைத் தடுத்து நிறுத்தியதில், இருதரப்புக்கும் மோதல் ஏற்படவே காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டும், லத்திகளால் தாக்கப்பட்டும் பலர் காயமடைந்தனர். இருப்பினும், சிஜேபியினர் உறுதியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய ராப் இசைப் பாடகரான ஹனுமன்கைன்ட் நேற்று கலந்துகொண்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டிருந்த அவர், காவல்துறை தடியடி நடத்தியபோது அங்கு எடுக்கப்பட்ட விடியோக்களைப் பகிர்ந்திருந்தார். அதில், காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, மக்களைத் தடிகளால் அடிப்பதற்குச் சற்று முன்பு” எனக் குறிப்பிட்ட அவர், தடியடி தொடர்பான விடியோக்களையும் பகிர்ந்திருந்தார்.
மேலும் அவரது பதிவில், ”இங்கு திரண்டிருந்த மக்களுக்கு எதிராக இப்படியொரு படைபலத்தைப் பயன்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை. நாம் இதைவிடச் சிறந்த ஒன்றிற்குத் தகுதியானவர்கள் என்று மக்கள் நம்புவது ஒரு குற்றமில்லை” எனக் குறிப்பிட்ட ஹனுமன்கைன்ட், மற்றொரு பதிவில், “நான் மிகவும் வேறுபட்ட இரண்டு போராட்டங்களைக் கண்டேன். ஒன்று மக்களால் உருவாக்கப்பட்டது. மற்றொன்று எதிர்வினையால் உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.
’பிக் டாக்ஸ்’, ‘ரன் இட் அப்’ போன்ற ராப் பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இந்தியப் பாடகர் ஹனுமன்கைன்ட். கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் சூரஜ் சேருகத். ராப் இசைப் பாடல்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.

ஹனுமன்கைன்ட் பதிவு
Summary
Rap Singer Hanumankind participated in the CJP protest!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











