கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இலங்கை சென்ற சீரியல் நடிகை!

இலங்கைக்குச் சென்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை குறித்து...

இலங்கையில் நடிகை பரமேஸ்வரி ரெட்டி - இன்ஸ்டாகிராம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:47 pm IST

மனசெல்லாம் தொடரில் நாயகியாக நடித்த நடிகை பரமேஸ்வரி ரெட்டி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இலங்கை சென்றுள்ளார்.

தற்போது முழுக்க தெலுங்கு தொடரில் நடித்துவரும் இவர், பிறந்தநாளுக்காக குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ளார். இதனால் இது தனக்கு மறக்க முடியாத பிறந்தநாள் எனவும் பரமேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 259 நாள்களுக்கு மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பானது. மிகக்குறுகிய காலமே இத்தொடர் ஒளிபரப்பாகி இருந்தாலும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இத்தொடரில் நாயகியாக வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி ஆகியோர் நடிக்க இவர்களுக்கு ஜோடியாக நடிகர்கள் சுரேந்தர் மற்றும் தீபக் குமார் ஆகியோர் நடித்தனர்.

மனசெல்லாம் தொடர்

மனசெல்லாம் தொடர்

நான்கு முக்கிய பாத்திரங்களும் சூழல் காரணமாக தாங்கள் காதலித்து வந்தவர்களை விடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்கின்றனர். இதனால் ஏற்படும் சிக்கல்களும் சவால்களுமே இத்தொடரின் மையக்கருவாக இருந்தது.

இத்தொடரில் நந்தினி பாத்திரத்தில் பரமேஸ்வரியும் கரிகாலன் பாத்திரத்தில் தீபக்கும் நடித்தனர். இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளப் பக்கத்தில் பரமேஸ்வரிக்கு புதிய ரசிகர் கூட்டமே உருவானது.

பரமேஸ்வரி ரெட்டி

பரமேஸ்வரி ரெட்டி

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஒருசில சுயாதீனப் பாடல்களில் நடனமாடினார். தற்போது தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகிவரும் சீதாராமையாகாரி மனவராலு என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இதனால் தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தனது பிறந்தநாளை நேற்று வெகுவிமரிசையாகக் கொண்டாடியுள்ளார். இதற்காக தனது குடும்ப உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டமாகவும் சுற்றுலாவாகவும் இருக்கும் வகையில் இப்பயணத்தை அவர் திட்டமிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்ன திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Manasellam serial actress Parameswari reddy Birthday celebration in srilanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.