சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!

மனசெல்லாம் தொடரின் நாயகி நடிகை பரமேஸ்வரி தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளது குறித்து...

News image

பரமேஸ்வரி ரெட்டி - யூடியூப்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:09 pm IST

மனசெல்லாம் தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்ற நடிகை பரமேஸ்வரி ரெட்டி தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். இத்தொடருக்கான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பானது. 259 நாள்களில் இந்த தொடர் நிறைவடைந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றாக இருந்தது.

இத்தொடரில் நாயகியாக வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி ஆகியோர் நடிக்க இவர்களுக்கு ஜோடியாக நடிகர்கள் சுரேந்தர் மற்றும் தீபக் குமார் ஆகியோர் நடித்தனர். நான்கு முக்கிய பாத்திரங்களும் சூழல் காரணமாக தாங்கள் காதலித்து வந்தவர்களை விடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்கின்றனர். இதனால் ஏற்படும் சிக்கல்களும் சவால்களுமே இத்தொடரின் மையக்கருவாக இருந்தது.

இத்தொடரில் கரிகாலன் - நந்தினி பாத்திரத்தில் நடித்த தீபக் குமார் - பரமேஸ்வரி ரெட்டி இடையிலான காதல் காட்சிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியிருந்தது.

இத்தொடருக்குப் பிறகு தெலுங்கு மொழியின் சுயாதீனப் பாடல்களில் பரமேஸ்வரி ரெட்டி நடனமாடி வந்தார். இதனிடையே தற்போது தெலுங்கு மொழியில் புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கு தொடரில் பரமேஸ்வரி

தெலுங்கு தொடரில் பரமேஸ்வரி - இன்ஸ்டாகிராம்

சீதாராமையாகாரி மனவராலு எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடர், தாத்தா - பேத்தி இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இத்தொடரின் முன்னோட்ட விடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் சொந்தமாக வீடு கட்டி, புதிதாக கார் வாங்கியதால், ஒரு தொடரிலேயே மிகப்பெரிய வளர்ச்சியை பரமேஸ்வரி ரெட்டி எட்டியுள்ளதாக ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Zee tamil Manasellam serial actress Parameswari Reddy to star as female lead in a Telugu serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.