பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய சீரியல் நடிகை பரமேஸ்வரி!

நடிகை பரமேஸ்வரி ரெட்டி தெலுங்கு பாடலுக்கு நடனமாடியுள்ளது குறித்து...

 serial actress Parameswari reddy

நடிகை பரமேஸ்வரி ரெட்டி - இன்ஸ்டாகிராம்

Published On :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மனசெல்லாம் தொடரின் நாயகி பரமேஸ்வரி ரெட்டி, தெலுங்கு சுயாதீன பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அவர் நடனமாடிய பாடலின் முன்னோட்ட விடியோ தற்போது வெளியாகியுள்ளது. இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணியில் மலரும் காதல் குறித்து இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சின்ன திரையில் நடித்துவந்த நிலையில், தற்போது தெலுங்கு பாடலுக்கு பரமேஸ்வரி நடனமாடியுள்ளார். இதன்மூலம் தெலுங்கில் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை பரமேஸ்வரி ரெட்டி

நடிகை பரமேஸ்வரி ரெட்டி - இன்ஸ்டாகிராம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையில் மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி, தீபக், ஜெய்பாலா உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வந்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குறுகிய காலமே ஒளிபரப்பாகியிருந்தாலும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மைத் தொடர்களில் ஒன்றாக மனசெல்லாம் இருந்தது.

இத்தொடரில் தீபக் - பரமேஸ்வரி தம்பதிக்கு இடையிலான காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவர்களின் காதல் காட்சிக்கு இணையத்தில் ரசிகர்கள் ஏராளம்.

பாடல் முன்னோட்டத்தில் நடிகை பரமேஸ்வரி ரெட்டி

பாடல் முன்னோட்டத்தில் நடிகை பரமேஸ்வரி ரெட்டி - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், தற்போது தெலுங்கில் புதிய சுயாதீன பாடலுக்கு பரமேஸ்வரி ரெட்டி நடனமாடியுள்ளார். இதில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக பரமேஸ்வரி நடித்துள்ளார்.

கிராமத்துப் பின்னணியில் மலை, ஆறுகளிடையே உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலின் முன்னோட்ட விடியோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

Zee tamil Manasellam serial actress Parameswari reddy danced to a Telugu song

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.