பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான நடிகர் குமரன் தியாகராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் குமரன் தங்கராஜன்.
இதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.
தொடர்ந்து, மாய தோட்டா, வதந்தி இணையத் தொடரில் நடித்திருந்தார். பின்னர், பாலாஜி வேணுகோபால் இயக்கிய குமார சம்பவம் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
இந்த நிலையில், இறுதிப்பக்கம் படத்தை இயக்கிய மனோ கண்ணதாசன் இயக்கத்தில் புதிய படத்தில் குமரன் நடித்து வந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்மேகா மணிமேகலை நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் கதை, மர்மம் நிறைந்த திரில்லர் பாணியில், திருச்சி, பெரம்பலூர் மாவட்ட பின்னணியைச் சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் குமரன் தியாகராஜன் நடித்துள்ள இந்தப் புதிய படத்தின் பெயர், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
Summary
Filming has wrapped up for the new movie starring Kumaran Thiyagarajan, the actor who gained fame through the Pandian Stores series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநர் திரு இயக்கத்தில் நடிக்கும் ஷண்முக பாண்டியன்!

இன்று முதல் ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடர்! இயக்குநர் வி. சேகருக்கு கெளரவம்!

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’: புதிய தொடரின் பெயர் மாற்றம்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




