வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

இன்று முதல் ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடர்! இயக்குநர் வி. சேகருக்கு கெளரவம்!

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடர் இன்று முதல் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது குறித்து...

News image

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடர் - படம்: எக்ஸ்

Updated On :29 ஜூன் 2026, 2:08 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ என்ற புதிய தொடர் இன்று முதல் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

கூட்டுக் குடும்பக் கதையாக ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பாணியில் இந்தப் புதிய தொடர் எடுக்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மளிகைக் கடையைச் சுற்றி நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் நிலையில், உணவகம் நடத்தும் தந்தை மற்றும் மகன்களை பிரதானப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் புரொடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி இந்தத் தொடரை இயக்குகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற ஜோடியான ஸ்டாலின் - நிரோஷா இணை, இந்தத் தொடரிலும் சேர்ந்து நடிக்கின்றனர்.

Story image

மேலும், இந்தத் தொடரில் வைஷ்ணவி, வசந்த் வசி, மகேஷ் சுப்ரமணியம், சியாமந்தா, அஜித் குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோவில் மூலக்கதை என்ற டைட்டில் கார்டில் மறைந்த இயக்குநர் வி. சேகர் என்று பெயர் போடப்பட்டுள்ளது. இது அவருக்கு கொடுக்கும் கெளரவமாகப் பார்க்கப்படுகிறது.

மறைந்த இயக்குநர் வி. சேகர், திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடர்களையும் இயக்கியிருந்தார்.

‘வரவு எட்டணா செலவு பத்தணா’, விரலுக்கேத்த வீக்கம்’, ‘காலம் மாறிப் போச்சு’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி கவனம் பெற்றார். நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகளில் காண்பித்துள்ளார்.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் தொடரும் இவரின் கூட்டுக் குடும்பக் கதையாக எடுக்கப்படுவதால், இவரின் பெயர் டைட்டில் கார்டில் சேர்க்கப்படுகிறது.

இந்தத் தொடர் இன்று (ஜூன் 29) முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The serial 'Onna Irukka Kathukanum' is set to air on Vijay TV starting today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.