கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்து...

News image

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடர் காட்சி. - படம்: விடியோ கிளிப்

Updated On :21 ஜூன் 2026, 2:40 pm IST

புதிய தொடரான ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’. இந்தத் தொடருக்கு லட்சுமி மெஸ் பெயரிடப்பட்ட நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுக் குடும்பக் கதையாக ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பாணியில் இந்தப் புதிய தொடரும் எடுக்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மளிகைக் கடையைச் சுற்றி நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் நிலையில், உணவகம் நடத்தும் தந்தை மற்றும் மகன்களை பிரதானப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி இந்தத் தொடரை இயக்குகிறார். ஸ்பெக்ட்ரம் புரொடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற ஜோடியான ஸ்டாலின் - நிரோஷா இணை, இந்தத் தொடரிலும் சேர்ந்து நடிக்கின்றனர்.

மேலும், இந்தத் தொடரில் வைஷ்ணவி, வசந்த் வசி, மகேஷ் சுப்ரமணியம், சியாமந்தா, அஜித் குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் தொடர் வரும் ஜூன் 29 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The broadcast date for the new series 'Onna Irukka Kathukanum' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.