விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பாணியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக லட்சுமி மெஸ் பெயரிடப்பட்ட நிலையில், தற்போது ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டுக் குடும்பக் கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் எடுக்கப்படும் நிலையில், அதே பாணியில் ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடர் எடுக்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மளிகைக் கடையைச் சுற்றி நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் நிலையில், உணவகம் நடத்தும் தந்தை மற்றும் மகன்களை பிரதானப்படுத்தி புதிய தொடர் எடுக்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி இந்தத் தொடரை இயக்குகிறார். ஸ்பெக்ட்ரம் புரொடக்ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற ஜோடியான ஸ்டாலின் - நிரோஷா இணை, இந்தத் தொடரிலும் சேர்ந்து நடிக்கின்றனர்.
மேலும், இந்தத் தொடரில் மகேஷ் சுப்ரமணியம், ஷமந்தா, வசந்த் வசி, அஜித் குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒண்ணா இருக்க கத்துக்கணும் தொடர் நான் பிரைம்(non prime) நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
A new serial is being produced in the style of the Pandian Stores series, which airs on Vijay TV. Although it was initially titled Lakshmi Mess, the name has now been changed to Onna Irukka Kathukanum.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











