சின்ன திரை நடிகை ஆர்த்தி சுபாஷ் புதிதாக கார் வாங்கியுள்ளார். புதிய கார் வாங்கியதை அவர் கொண்டாடும் விதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். இதனை அடுத்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் ஆர்த்தி நடித்தார்.
இத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ஒளிபரப்பாகிவரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் பைரவி என்ற முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் ஆர்த்தியின் நடிப்பு ரசிகர்கள் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.அ

ஆர்த்தி சுபாஷ் - இன்ஸ்டாகிராம்
சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்க் கூடிய ஆர்த்தி, சமீபத்தில் தனது காதலனை (பவன் ரவீந்திரா) அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு அறிவித்தார்.
தற்போது, ரூ. 32 லட்சம் மதிப்புடைய மகேந்திராவின் பிஇ 6இ காரை ஆர்த்தி வாங்கியுள்ளார். சொகுசு கார் வாங்கியதும் காரில் அமர்ந்து மதுபாட்டியல் திறந்து கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் நடிகை ஆர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
Serial Actress aarti subash Celebrates Purchase of New Car in a Unique Way
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாகிராமில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!

இளம் வயதில் புது வீடு கட்டி குடியேறிய சின்ன திரை நடிகை!

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி




