தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

என் புதிய வழி; யோகாவால் என்னை நான் உணர்கிறேன்! நடிகை கனிகா

யோகாவால் உடல் மற்றும் மனநிலையில் நடந்த மாற்றங்கள் குறித்து நடிகை கனிகா வெளியிட்ட விடியோ குறித்து...

News image

நடிகை கனிகா - இன்ஸ்டாகிராம்

Updated On :6 ஜூலை 2026, 4:06 pm IST

யோகாசனப் பயிற்சியால் தன்னை லேசாக உணர்வதாக நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மையத்தில் யோகா வகுப்புக்குச் சென்றுள்ள அவர், யோகாவால் தனது உடல் மற்றும் மனநிலையில் நடந்த மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்விடியோ வெளியிட்டு நடிகை கனிகா பேசியதாவது:

''இன்று எனது 7 வது நாள். தொடர்ந்து 7 நாள்கள் யோகா வகுப்பை முடித்துள்ளேன். ஆரம்பத்தில் எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் வந்தேன். என்னுடைய மேம்பட்ட வடிவத்தை அடைவதுதான் என்னுடைய இலக்காக இருந்தது.

இந்த யோகா மையம் குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், எனக்கு இப்போதுதான் நேரம் அமைந்தது. இன்றைய இறுதி நாளில் என்னை நான் அடையாளம் கண்டுள்ளேன். லேசாக இருப்பதைப்போல உணர்கிறேன்.

இன்று அமைதியாக உணர்கிறேன். என்னுடன் நான் இரண்டரக் கலந்துவிட்டதைப்போல உணர்கிறேன். புத்துணர்ச்சியாக இருக்கிறேன்.

நமது பொறுப்புக்கு எல்லையில்லை. ஒவ்வொரு நாளும் நான் எழும்போது நமக்கு ஒரு பொறுப்பு உள்ளதை உணர்கிறேன். என் மகனையும், என் குடும்பத்தையும் இங்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு ஒரு புதிய வழி கிடைத்துள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

My new path I discover myself through yoga Actress Kanika

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.