
இன்று முதல் ஒளிபரப்பாகும் இரு புதிய தொடர்கள்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரு புதிய தொடர்கள் குறித்து...

குறிஞ்சி, அபிராமி தொடர்கள் - படம்: இன்ஸ்டாகிராம்
சன் தொலைக்காட்சியில் இன்று(செப். 28) முதல் குறிஞ்சி, அபிராமி என்ற இரு புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளது.
குறிஞ்சி தொடர்
குறிஞ்சி தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே, அகிலா என்ற பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் விஜய் விஷ்வா, ஜீவிதா, சரத், மிதுன், கோகுல், பத்மசேனா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
வாழ்க்கை மாறும் என்று லட்சியத்தோடு காத்திருக்கும் பெண்ணுக்கும், முரட்டுத்தனமான ஆணுக்கும் இடையே ஏற்படும் மோதல், பின்னாளில் எப்படி காதலாக மாறுகிறது என்பதை மையப்படுத்தி குறிஞ்சி தொடரின் கதை எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடர் இன்று முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
அபிராபி தொடர்
குடும்பத்திற்காகவே வாழும் பெண், தான் படிக்காதவர் என்ற காரணத்திற்காக கணவராலும் குழந்தைகளாலும் புறக்கணிப்படுகிறார். அந்தப் பெண் எவ்வாறு தன்னிலையை உயர்த்தி வாழ்க்கைப் போராட்டத்தை வெல்கிறார் என்பதைப் மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
அபிராமி தொடரில் காவ்யா, ஹரிஷ், யமுனா, ரெபேக்கா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்தத் தொடர் இன்று முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1. 30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
Summary
Two new serials, 'Kurinji' and 'Abirami', are set to premiere on Sun TV starting today (Sept. 28).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






