
மெதுவாகத் திரும்பும் இயல்பு நிலை! ஒரு மாதமாக மருத்துவமனையில் இருக்கும் நடிகை ஸ்ருதி ராஜ்!
நடிகை ஸ்ருதி ராஜ் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவ சிகிச்சையில் இருப்பது குறித்து...

நடிகை ஸ்ருதி ராஜ் - இன்ஸ்டாகிராம்
நடிகை ஸ்ருதி ராஜ் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகிறார்.
காலில் ஏற்பட்ட தசைநார் சிதைவு காரணமாக மருத்துவ அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி ராஜ் ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளதாவது:
''என் காலுக்கு என்னவாயிற்று என்று நீங்கள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி நலம் விசாரித்தீர்கள். என் குதிகாலில் தசை நார்க் கிழிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். குணமடைவதற்காக நான் சற்று ஓய்வில் இருக்கிறேன். அதனால்தான் உங்கள் அக்கறை மிகுந்த நலம் விசாரிப்புக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை.
ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. என் இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் இப்போது நன்றாகவே உணர்கிறேன். எனினும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உங்கள் அக்கறையினால் நான் நாளுக்கு நாள் தேறிவருகிறேன்.
என் மீது அக்கறை கொண்டு மெசேஜ் அனுப்பி நலம் விசாரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அன்பும் அக்கறையும் எனக்கு மிகப்பெரியது. எனக்காக இருப்பதற்கு நன்றிகள்'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் நடிகை ஸ்ருதி ராஜ் - இன்ஸ்டாகிராம்
யார் இந்த ஸ்ருதி ராஜ்?
நடிகை ஸ்ருதி ராஜ் - தீபக் தினகரன் இணைந்து நடித்து புகழ் பெற்ற தொடர் தென்றல்.
சன் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான இத்தொடர் 2015 வரை 6 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பானது. துளசி பாத்திரத்தில் நடிகை ஸ்ருதி நடித்திருந்தார். எதார்த்தமான குடும்பத் தலைவியாக பலரின் மனம் கவர்ந்த நடிகையாக ஸ்ருதி மாறினார்.
இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அழகு, தாலாட்டு, லட்சுமி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு இவர் நடித்த ஆஃபிஸ் தொடர், இளம் தலைமுறையினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
thendral serial Actress Sruthi Raj has been in the hospital for a month
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






