
புதிய பயணம்... மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பு! நடிகை மதுமிதா விடியோ பதிவு!
நடிகை மதுமிதாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த அறிவிப்பு தொடர்பாக...

நடிகை மதுமிதா - இன்ஸ்டாகிராம்
சின்ன திரை நடிகை மதுமிதா புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு மக்களிடம் கிடைத்த அன்பும் ஆதரவும், தனது புதிய பயணத்துக்கும் கிடைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுமிதா. ஜனனி என்ற பாத்திரத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரிலும் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார். இத்தொடரில் நிலா என்ற பாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார்.
இத்தொடரும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் முதன்மை இடத்தில் அய்யனார் துணை உள்ளது.
இதற்கு முன்பு நடித்த எதிர்நீச்சல் தொடரும் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததால், மதுமிதா நடிக்கும் தொடர்கள் மிகப்பெரிய ஹிட் அடிப்பதாக பலர் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தனது புதிய பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முந்தைய பயணத்தில் தனக்கு அன்பும் ஆதரவும் அளித்ததைப்போல, புதிய பயணத்திலும் ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகை மதுமிதா, திரைப்பட வாய்ப்பு குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர், தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தின் அடுத்தகட்ட அறிவிப்பாகக் கூட இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Summary
Ethirneechal ayyanar thunai serial actress madhumitha instagram video goes viral
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







