
ஷாதிகா எனக்கு அக்கா! பிக் பாஸ் வீட்டில் காதல் நாடகமாடும் முகேஷ்?
நடிகை ஷாதிகா எனக்கு அக்கா மாதிரி என நடிகர் முகேஷ் பிக் பாஸ் வீட்டில் கூறியுள்ளது குறித்து...

முகேஷ் / ஷாதிகா - எக்ஸ்
நடிகை ஷாதிகா எனக்கு அக்கா மாதிரி என நடிகர் முகேஷ் பிக் பாஸ் வீட்டில் கூறியுள்ளார்.
ஷாதிகாவை முகேஷ் காதலிப்பதைப்போன்று பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பேசிக்கொண்ட நிலையில், தற்போது ஷாதிகா தனக்கு அக்காவைப் போன்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 4வது வாரத்தை எட்டியுள்ளது. 25 வது நாளான இன்று பிக் பாஸ் வீட்டில் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் விருந்தினர்களாக இருந்தவர்கள் ஹோட்டல் பணியாளர்களாகவும், பணியாளர்களாக இருந்தவர்கள் விருந்தினர்களாகவும் மாறியுள்ளனர்.
அந்தவகையில், நடிகை ஷாதிகா, முகேஷ், ராகவ், அவினாஷ், அன்சர், வினோத் பாபு, முத்தழகி, முனியம்மா உள்ளிட்டோர் விருந்தினர்களாகவும், லட்சுமி பிரியா, ஜாவேத், தன்யா, அஸ்மிதா, ஆகியோர் ஹோட்டல் ஊழியர்களாகவும் மாறியுள்ளனர்.
விருந்தினர்களாக உள்ள முனியம்மா அம்மாவாகவும், முகேஷ் மகனாகவும் நடித்து வருகின்றனர். அவர் ஷாதிகாவை காதலிப்பதைப்போன்று வசனங்களைப் பேசி வருகிறார்.
அப்போது குறுக்கிட்ட மற்றொரு போட்டியாளர், அக்கா என்று கூறிவிட்டு ரொமான்ஸ் பேசுவியா? எனக் கேள்வி கேட்கிறார்.
அதற்கு பதில் அளித்த முகேஷ் ஷாதிகா எனக்கு அக்காதான் எனக் கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த முனியம்மா, அக்கா எனக் கூறிவிட்டு திருமணம் பற்றி பேசக்கூடாது என கண்டிப்புடன் கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்துகொண்டு காதலிக்க முடியுமா? இந்த இடத்தில் அது சாத்தியமா? இதை நான் செய்வேனா? என முனியம்மாவிடம் முகேஷ் கூறுகிறார். காலம் கண்டு நடந்துகொள்ள வேண்டும் என முகேஷின் முடிவை முனியம்மா பாராட்டுகிறார்.
இந்த விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், ஷாதிகாவை காதலிப்பதைப்போன்று முகேஷ் நடந்துகொள்வது பிக் பாஸ் கண்டெண்ட்டுக்காக மட்டுமே என்றும் ஷாதிகா உண்மையான ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Bigg boss 10 shathiga mukesh love track investigated by muniyamma
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







