அம்மாவுக்காக பிக் பாஸ் வந்தேன்: வெளியேறியபோது ஷாதிகா உருக்கம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இல்லையென்றாலும் அம்மாவுக்காக கலந்துகொண்டதாக நடிகை ஷாதிகா தெரிவித்துள்ளது குறித்து...

ஷாதிகா - எக்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இல்லையென்றாலும் அம்மாவுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக நடிகை ஷாதிகா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 75 நாள்களுக்குப் பிறகு கடந்த வாரத்துடன் வெளியேற்றப்பட்டபோது உருக்கமாக இதனை அவர் தெரிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் டிடிஎஃப் வாசன், ஜேசன், பிரித்வி, முகேஷ், ஷாதிகா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் வாக்களித்தனர்.
இதில், குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகை ஷாதிகா மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.
இதில் முகேஷ் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்தாலும் டிடிஎஃப் வாசனின் எவிக்ஷன் ஃபிரீ பாஸ் மூலம் மீண்டும் போட்டியில் தொடர்ந்தார். ஆனால் தற்போது மீண்டும் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஷாதிகாவின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. போட்டியில் இருந்து வெளியேறும்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசுவது வழக்கம். ஆனால், அவர்களை பார்க்க விரும்பவில்லை என விஜய் சேதுபதியிடம் கூறிவிட்டு பிக் பாஸ் மேடையில் இருந்து ஷாதிகா வெளியேறினார்.
வெளியேறும்போது பேசிய ஷாதிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தான் போட்டியில் நீடிக்கத் தகுதியானவள் எனவும் குறிப்பிட்டார்.
பிக் பாஸ் செல்ல விருப்பம் இல்லை என்றாலும், அம்மாவுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட ஷாதிகா, அவரை மகிழ்விக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தான் யார் என்பது என்னுடைய நெருங்கிய வட்டத்திற்கு தெரியும் என்பதால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற வருத்தம் இல்லை என்றும் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாகக் கூறினார்.
Summary
I joined Bigg Boss for my mother Shadhika gets emotional upon her exit!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


