அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

திடீர் திருப்பம்! யாரும் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை.

vijay sedhupathi

விஜய் சேதுபதி - கோப்புப்படம்

Updated On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5 வாரத்தை எட்டியுள்ளது. எப்போதும்போல விஜய் சேதுபதி, நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

5வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு முனியம்மாள், லட்சுமி பிரியா, ஜேசன், ஷமா, அன்சர், சாந்தினி, அஸ்மிதா ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்திருந்தனர்.

இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், இதில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

திடீர் திருப்பமாக, இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை (No Eviction) என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியவரும்

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆனந்தி, பிளாக் பாண்டி, மணிவண்ணன், சவின்யா, ஜாவித், குமரன் தங்கராஜன் ஆகியோர் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been revealed that no one was evicted from Bigg Boss Season 10 this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.