மகாநதி தொடர் நடிகை லட்சுமி பிரியாவின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் தொடராகவும், டிஆர்பியில் முன்னணியில் உள்ள தொடராகவும் உள்ளது. இத்தொடருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும், மகாநதி தொடரில் காவேரி பாத்திரத்தில் நடிக்கும் லட்சுமி பிரியாவுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் 2.70 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இதையும் படிக்க: பிரபல சீரியலை பின்னுக்குத் தள்ளிய புதிய தொடர்: இந்த வார டிஆர்பி!
மாடலிங் துறையில் இருந்த லட்சுமி பிரியா, யோகிபாபுவின் பன்னி குட்டி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து தி ரோட், பத்துதல, ட்ரிப் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனிடையே, மலையாளத் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்த லட்சுமி பிரியா, தற்போது மகாநதி தொடரில் பிரதானப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை லட்சுமி பிரியாவுக்கு இன்று(அக். 11) பிறந்த நாள் என்பதால் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மகாநதி தொடரில் நடிக்கும் ருத்ரன் பிரவீன், காவியா மற்றும் தொடர்குழு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சுமி பிரியாவுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.