பிரபல சீரியலை பின்னுக்குத் தள்ளிய புதிய தொடர்: இந்த வார டிஆர்பி!

பிரபல சீரியலை பின்னுக்குத் தள்ளிய புதிய தொடர்: இந்த வார டிஆர்பி!

மக்கள் மனதில் இடம் பெற்ற தொடர்கள்...
Published on

இந்த வாரம் டிஆர்பி புள்ளிகளில் எந்தெந்த தொடர்கள் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளம் வயதினர் மற்றும் அலுவலகத்துக்கு செல்வோரும் சின்னத்திரைத் தொடர்களை விரும்பி பார்க்கின்றனர்.

அலுவலகம் செல்வோர் விருப்ப நேரங்களில் தொடர்களை ஓடிடித் தளங்களில் பார்க்கின்றனர். மக்கள் மத்தியில் எந்த தொடர் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது என்பதை டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 9.59 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

தொடங்கி சில வாரங்களேயான மூன்று முடிச்சு தொடர் 8.35 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதல் இரு இடங்களை பிடித்துவந்த சிங்கப் பெண்ணே தொடர் 8.26 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மருமகள் தொடர் இந்த வாரம் 7.98 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. சுந்தரி தொடர்7.85 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 7.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com