அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று தமிழ்நாட்டின் பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பான ‘ஒளிமயமான எதிர்காலம்’ நிகழ்ச்சியில் தெரிஞ்சிக்கலாம் வாங்க என்ற பகுதியில் தென்காசியைச் சேர்ந்த எம்.ஜி. ராம்குமார் என்ற நேயர், 2044-ல் தென்காசியைச் சேர்ந்த ஒருவர் இந்தியப் பிரதமராக வேண்டும் என்று காசி விசுவநாதரை வேண்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், எதற்காக 2044 வரைக்கும் என்று கூறிவிட்டு, பெரும்பாலும் அடுத்த பிரதமர் தமிழ் பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
(அடுத்த பிரதமர்,) தமிழ் மொழி பேசத் தெரிந்தவராக இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய கணிப்பு அதுதான் என்றும் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.