நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளாக போட்டி நடைபெற்று வருகிறது.
இதற்கு முந்தைய இரு வாரங்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று ரவீந்தரும், அர்ணவும் வெளியேறிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதையும் படிக்க: ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்ட அமரன்..! குவியும் வாழ்த்து!
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, செளந்தர்யா, தர்ஷா குப்தா, சத்யா, முத்துக்குமரன், அருண் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேறுவார்.
மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தற்போதைய நிலவரப்படி தர்ஷா குப்தா அல்லது அன்ஷிதா பின்தங்கிவுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் புரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயனை நடிகர் தீபக் ஆரத்தழுவி வரவேற்றார்.
பின்னர், அமரன் படத்தின் டிரைலர் போட்டியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் சிறிதுநேரம் அனைவரிடம் கலகலப்பாக பேசிவிட்டு, பிக் பாஸ் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.