சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் மூலம் புதிய இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கிவருகிறார். குறைந்த பட்ஜெட்டில் சிறந்த படங்களை இவரது நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான தாய் கிழவி திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்ததைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை மேடையில் அறிவித்தார்.
சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் 10-வது படமான இதை அறிமுக இயக்குநரான அம்மாமுத்து சூர்யா இயக்குகிறார்.
அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா
இவர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாக இருந்த ஹேப்பி எண்டிங் திரைப்படத்தின் இயக்குநர். அந்தப் படத்தின் ப்ரோமோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போனதால் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
Summary
The announcement of Sivakarthikeyan production's next film has been made.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: கதாபாத்திர அறிமுக விடியோ!

கலசபாக்கம் திமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம்

கர படத்தின் கதாபாத்திரங்கள் சிறப்பு விடியோ!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

