மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஸ்மிருதி விலகியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் என நினைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் மையக்கரு.
இந்த நிலையில், மிஸ்டர் மனைவி தொடரில் கவிமலர் பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்மிருதி காஷ்யப், இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்..! வைரலாகும் விடியோ!
ரோஜா தொடரில் பூஜா பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், மிஸ்டர் மனைவி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்துவந்த இவர், இத்தொடரில் இருந்து விலகியுள்ள செய்தி, அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.
முன்னதாக, நடிகை ஷாபான மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் அஞ்சலி பாத்திரத்தில் நடிகை தேப்ஜானி மொடாக் நடித்து வருகிறார்.
தற்போது, ஸ்மிருதி காஷ்யப் நடித்துவந்த கவிமலர் பாத்திரத்தில் சின்னத்திரை நடிகை கீர்த்தி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.