நீங்கள் என்ன பாயச ஆட்சியா? - தவெக தலைவர் விஜய்

சிறுபான்மையினர், பாசிச ஆட்சி, மோடி மஸ்தான் ஆட்சி என்கின்றனர், அவர்கள் பாசிச ஆட்சி என்றால் நீங்கள் என்ன பாயச ஆட்சியா?
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
2 min read

சிறுபான்மையினர், பாசிச ஆட்சி, மோடி மஸ்தான் ஆட்சி என்கின்றனர், அவர்கள் பாசிச ஆட்சி என்றால் நீங்கள் என்ன பாயச ஆட்சியா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.

நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் , வி.சாலை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அந்த கட்சியின் 4 மணியளவில் தொண்டர்களின் ஆரவார கோஷத்துக்கு மத்தியில் மிகவும் உற்சாகமாக மேடைக்கு வந்த விஜயை பார்த்த தொண்டர்கள் வீசிய தவெக கட்சி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தொண்டர்களின் நோக்கி கையசைத்தப்படி மோடைக்கு வந்தடைந்தார்.

இதனிடையே மாநாட்டில் கூடியிருக்கும் தொண்டர்களின் உற்சாகத்தை கண்டு கண்கலங்கினார் விஜய்.

பின்னர் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்து சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.

பெரியார், அம்பேத்கர், காமராஜர் பெயர்களை கூறி அரசியலுக்கு வருவதாக சொல்லும் விஜய். பெரியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் விஜய் கையைப்பிடித்து அழைத்து வருவதுபோல காட்சிகளும் இடம் பெற்றன.`தமிழ்த்தாயின் தலைச்சன் பிள்ளை விஜய்' என கொள்கை பாடலில் வரிகள் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் தவெக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.

பின்னர் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் ஆசி பெற்ற பின்னர் பேசிய விஜய், பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை. கவனமாக களமாட வேண்டும்.

அனைவரும் சமமே

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே நம் கோட்பாடு . மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கை. மதம், சாதி, பாலினம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே. எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம்.

இரு மொழி கொள்கை

மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை. தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தவெக பின்பற்றும்

"மத நம்பிக்கை உள்ளவர்கள், அற்றவர்களை சமமாக பார்ப்போம்". போதை அறவே இல்லாத தமிழ்நாட்டை படைத்தல், பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பதே தவெக கொள்கை .

செயல் திட்டங்கள்

தவெக ஆட்சியில் அரசியல் தலையீடு இல்லாத நிர்வாக சீர்திருத்தம், ஊழலற்ற நிர்வாகம்; சாதி, மத, பாலின சார்பின்மையுடன் அரசு நிர்வாகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும், விகிதாசார இடஒதுக்கீடு, தமிழே ஆட்சி மொழி- வழக்காடு மொழி, தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி- தமிழ் வழிக் கல்வி படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு முன்னுரிமை, மாநில தன்னாட்சி உரிமை மீட்பு, மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டுவர நடவடிக்கை, ஆளுநர் பதவி ஒழிப்பு, வர்ணாசிரம கொள்கைகள் எந்த வகையில் இருந்தாலும் அதை முழுமையாக தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கும். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாம் கையில் எடுக்க போறது இல்லை, எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை.

பாயச ஆட்சியா?

முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். பிளவுவாதிகளும், ஊழல்வாதிகளும் தான் எங்கள் எதிரி என பேசிய விஜய், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்துகின்றனர். அவர்கள்தான் எங்களின் அரசியல் எதிரி. பாஜகவும், திமுகவும் தான் எங்கள் அரசியல் எதிரிகள். பாஜக எங்களுக்கு சித்தாந்த எதிரி, திமுக எங்களுக்கு அரசியல் எதிரி. பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். ஊழல்வாதிகள், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள். சிறுபான்மையினர், பாசிச ஆட்சி, மோடி மஸ்தான் ஆட்சி என்கின்றனர். அவர்கள் பாசிச ஆட்சி என்றால் நீங்கள் என்ன பாயச ஆட்சியா?

கூத்தாடி விஜய்

என்னை கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள். நம்ம ஊர் வாத்தியார் எம்ஜிஆரையும், ஆந்திரா வாத்தியார் என்.டி.ஆரும் கட்சி தொடங்கிய போது அவரையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள். கூத்தாடி என்றால் என்ன கெட்ட வார்த்தையா? கூத்து இந்த மண்ணின் அடையாளம் என்றார்.

மகத்தான அரசியல் என்றால், மக்களுக்கான அரசியல் தான். மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் நோக்கமல்ல. ஏமாற்று சக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்றுவதுதான் எங்கள் நோக்கம்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும், நம்முடன் இணைந்து அரசியல் சேவையற்ற நம்பி வருவோரை உள்ளம் மகிழ்ந்து வரவேற்போம். அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்.

ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க என கூறினார்.

“ கூட்டணிக்கு வருவோருக்கும் ஆட்சியில் பங்கீடு அளிக்கப்படும், அதிகாரப்பகிர்வை செயல்படுத்துவோம்” என்று விஜய் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com