2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அரசியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா? - விஜய்

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய விஜய், அரசியல் மாறக்கூடாதா? என கேள்வி...

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் பேசிய தலைவர் விஜய்

Published On :

விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய அந்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் , வி.சாலை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அந்த கட்சியின் 4 மணியளவில் தொண்டர்களின் ஆரவார கோஷத்துக்கு மத்தியில் மிகவும் உற்சாகமாக மேடைக்கு வந்த விஜயை பார்த்த தொண்டர்கள் வீசிய தவெக கட்சி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தொண்டர்களின் நோக்கி கையசைத்தப்படி மோடைக்கு வந்தடைந்தார்.

பின்னர் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் ஆசி பெற்ற பின்னர் பேசிய விஜய், பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை. கவனமாக களமாட வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமே? அரசியல் மாறக்கூடாதா? என்றார்.

அரசியல்வாதிகளை இகழ்ந்து பேச மாட்டேன். அதுக்காக கண்மூடியும் இருக்க மாட்டேன்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. யாரின் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் நாங்கள் அல்ல.

பெரியார் தான் கொள்கை தலைவர். ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுக்கப்போவதில்லை.

பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெக-இன் எதிரி. நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும்.

பத்தோடு பதினொன்றாக, மாற்றுக் கட்சி என சொல்லிக்கொண்டு கூடுதல் சுமையாக வரவில்லை. ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன் என விஜய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.