கரூர் சம்பவத்தில் பழியை என்மீது போட்டு மு.க. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் விமர்சித்துள்ளார்.
கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக கரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஜோசப் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:
”ஒரு மனிதன் வாழ்வில் எவ்வளவு பெரிய உயர்வுக்கு சென்றாலும் மனதளவில் சில வலிகள், காயங்களை மறக்க முடியாது. எனக்கும் அப்படிதான். அனைத்தையும்விட அதிகமான வலி கரூர் சம்பவம்தான்.
மக்களை சந்தித்து பேச தான் திருச்சி, அரியலூர் எல்லாம் சென்றோம். பெரம்பலூர் சென்றபோது, கூட்டநெரிசல் அதிகம் இருப்பதாக காவல்துறை கூறியதால் ரத்து செய்துவிட்டோம்.
அதேபோல், நாமக்கலில் கூட்டத்தை முடித்தபோது கரூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். கூட்டத்தை காவல்துறையால் ரத்து செய்திருக்க வேண்டும்.
நெடுஞ்சாலையிலிருந்து காவல்துறை கூட்டிவந்து விட்டதை நம்பிவிட்டேன் அன்று. இதெல்லாம் யார் சொல்லி செய்தது? அந்த சம்பவத்தில் குழந்தைகளையெல்லாம் இழந்தோம். அந்த வலியில் இருக்கும் என்மேல் பழி போடுகிறீர்கள். அந்த வலியோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என்கிறார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?
போதுமான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை. பழியை எங்கள் மேல் போட்டுவிட்டு, அரசியல் செய்கிறார்கள். மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். எந்த ஆதயத்துக்காகவும் வரவில்லை.
இவர்களுக்கு நீங்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளீர்கள். இது போதாது, காலம் முழுவதும் எழ முடியாத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும்.
பணமா? ஜனமா? என்று கேட்டால், ஜனம்தான் முக்கியம் என்பேன்.” எனத் தெரிவித்தார்.
"At whose behest was the Karur incident carried out? Stalin is playing politics by pinning the blame on me!" — Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை

மக்கள் சந்திப்பு! மேடைக்கு வந்தார் முதல்வர் விஜய்!
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

கரூர் செல்வாரா முதல்வர் விஜய்? திமுக வழக்கால் திடீர் சிக்கல்!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



