தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இன்று(அக். 31) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
‘லப்பர் பந்து’ படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிரதானப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியான நாள் முதலே இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!
செப். 20 ஆம் தேதி வெளியான இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜா பாடல்கள், அட்டகத்தி தினேஷ் பாத்திரம் என வரவேற்பைப் பெறக்கூடிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் ‘லப்பர் பந்து’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.