

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் மேலும், மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 ஆட்டத்தில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் கடந்த 3 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார். உலக அளவிலான போட்டிகளில் மேலும், மேலும் சாதனைகளை படைக்க மாரியப்பனுக்கு எனது வாழ்த்துகள்.
மேலும் இதே போட்டியில் 1.88 மீ. உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமாருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.