
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் ஷரத் குமார் மற்றும் மாரியப்பன் தங்கவேலு இருவரும் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.
ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் அமெரிக்காவை சேர்ந்த எரெஸ் ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
அவருக்கு அடுத்தப்படியாக இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
முன்னதாக மாரியப்பன் தங்கவேலு, 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 3 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம் மற்றும் 10 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் 19-ஆவது இடத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.