bus
கோப்புப்படம்DIN

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
Published on

தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலான் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு செப். 5,6,7 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05/09/2024, 06/09/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 07/09/2024 (சனிக் கிழமை) ஆகிய நாள்களில் 1030 பேருந்துகளும், மற்றும் 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

bus
விநாயகர் சதுர்த்தி விடுமுறை: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 06/09/2024 (வெள்ளிக் கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 06/09/2024 வெள்ளிக்கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 23,514 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6,961 பயணிகளும் ஞாயிறு அன்று 21,650 பயணிகளும் பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com