
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு வெள்ளிக்கிழமை(செப். 6) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் ரயில்(06151), கோவை ரயில் நிலையத்துக்கு இரவு 11.45 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கோவை ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை(செப். 8) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில்(06152), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஓணம் விடுமுறையையொட்டி தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் - கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை(செப். 6) இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில்(06035) கொச்சுவேலி ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் செப். 6, 13, 20 ஆகிய மூன்று நாள்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மறுமார்க்கத்தில், கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை(செப். 7) பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயில்(06036) தாம்பரம் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் செப். 7, 14, 21 ஆகிய மூன்று நாள்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை(செப். 8) இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரயில்(06153) கொச்சுவேலி ரயில் நிலையத்துக்கு மறுநாள் பகல் 1.40 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் செப். 8, 15, 22 ஆகிய மூன்று நாள்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மறுமார்க்கத்தில், கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை(செப். 9) பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயில்(06036) தாம்பரம் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் செப். 9, 16, 23 ஆகிய மூன்று நாள்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.