விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பொறியியல் பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் ரத்து

வடகோவை ரயில் நிலையம் பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மெமு ரயில்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:00 pm

வடகோவை ரயில் நிலையம் பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பிப்ரவரி 27-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616), அன்றைய தினம் மாலை 4.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும். மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் (எண்: 66617) ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மாா்ச் 1-ஆம் தேதி காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66612), அன்றைய தினம் நண்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ( எண்: 66615) ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்:

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பிப்ரவரி 27-ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், இருகூா் - போத்தனூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது, சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிா்க்கப்படும்.

மாா்ச் 1-ஆம் தேதி இயக்கப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) மற்றும் எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி ரயில் (எண்: 16378) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாக செயல்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.